Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆஸ்திரேலியா: விக்டோரியா மாநிலத்தில் இனி முகக்கவசங்கள் அணிவது கட்டாயமில்லை

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில், நாளை முதல் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன.

வாசிப்புநேரம் -
ஆஸ்திரேலியா: விக்டோரியா மாநிலத்தில் இனி முகக்கவசங்கள் அணிவது கட்டாயமில்லை

(படம்: AP/Asanka Brendon Ratnayake)

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில், நாளை முதல் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன.

வெளிப்புறங்களில் பாதுகாப்பு இடைவெளியைப் பின்பற்றும் மக்கள், இனி முகக்கவசங்களை அணியத் தேவையில்லை.

வீடுகளில், 15 பேர்வரை ஒன்றுகூடுவதற்கு அனுமதியுண்டு.

வெளிப்புற ஒன்றுகூடுவோருக்கான எண்ணிக்கை வரம்பு, 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

அடுத்த மாத நடுப்பகுதியில் இருந்து, வீடுகளில் 30 பேர்வரை ஒன்றுகூடலாம்.

கிறிஸ்துமஸ், ஹனுக்கா (Hanukkah) கொண்டாட்டங்களை முன்னிட்டு அந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விக்டோரியா மாநிலத்தில், 25 விழுக்காட்டு ஊழியர்கள் மட்டுமே வேலையிடங்களுக்குச் சென்று பணிபுரிய முடியும்.

மற்றவர்கள், வீட்டிலிருந்தபடியே வேலை செய்யவேண்டும்.

உள்ளரங்கு விளையாட்டு நிகழ்ச்சிகள், திருமணங்கள், சமய நிகழ்ச்சிகள் முதலியவற்றில் 150 பேர்வரை பங்கேற்கலாம்.

திரையரங்குகள், உள்ளரங்கு நீச்சல் குளங்கள், நூலகம் போன்ற உள்ளரங்கு சமூக வசதிகள் ஆகியவற்றுக்கு ஒரே நேரத்தில் 150 பேர் வரை அனுமதிக்கப்படுவர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்