Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் குறைந்துள்ள கிருமிப்பரவல்

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் குறைந்துள்ள கிருமிப்பரவல்

வாசிப்புநேரம் -
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் குறைந்துள்ள கிருமிப்பரவல்

படம்: AFP

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கிருமித்தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது.

இன்று அங்கு புதிதாய் 392 பேருக்குக் கிருமித்தொற்று உறுதியானது. நேற்று (செப்டம்பர் 11) அங்கு ஆக அதிகமாக 450 சம்பவங்கள் பதிவாகின.

புதிதாய்ப் பாதிக்கப்பட்டவர்களில் 100 பேர், ஏற்கனவே கிருமி தொற்றியவர்களுடன் தொடர்பில் இருந்தனர்.

மற்றவர்களுக்கு எவ்வாறு கிருமி தொற்றியது என்பது இன்னும் தெரியவில்லை.

இந்நிலையில், விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ் ஆகிய மாநிலங்களில் கட்டுக்கடங்காமல் பரவும் டெல்ட்டா வகை நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துவதில் அதிகாரிகள் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.

தற்போது மெல்பர்ன், சிட்னி ஆகிய பெரிய நகரங்களில் கடுமையான முடக்கநிலை நீடிக்கிறது.

ஏனைய மாநிலங்களில் முடக்கநிலை தளர்த்தப்பட்டுள்ளது.

மீண்டும் பொருளியல் நடவடிக்கைகளைத் திறக்க, நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாய்ச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்