Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'கட்டிப்பிடி வைத்தியத்தால்' துப்பாக்கித் தாக்குதலைத் தடுத்து நிறுத்தியவர்

அமெரிக்காவின் ஆரிகன் மாநிலத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் நடக்கவிருந்த துப்பாக்கித் தாக்குதலைத் தடுத்து நிறுத்தியுள்ளார் பயிற்றுவிப்பாளர் ஒருவர்.

வாசிப்புநேரம் -
'கட்டிப்பிடி வைத்தியத்தால்' துப்பாக்கித் தாக்குதலைத் தடுத்து நிறுத்தியவர்

படம்: Multnomah County District Attorney

(வாசிப்பு நேரம்: 1 நிமிடம்)

அமெரிக்காவின் ஆரிகன் மாநிலத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் நடக்கவிருந்த துப்பாக்கித் தாக்குதலைத் தடுத்து நிறுத்தியுள்ளார் பயிற்றுவிப்பாளர் ஒருவர்.

வகுப்பறைக்குள் நுழைந்தபோது துப்பாக்கி ஏந்திய மாணவரைக் கண்டார் 27 வயது கியேனன் லோவ். மாணவரிடம் துப்பாக்கி இருப்பதை அறிந்த அவர், மாணவரிடமிருந்து அதை எடுத்து, மெல்ல அவரை அரவணைத்தார்.

அதே பள்ளியில் பாதுகாவலராகவும் பணியாற்றும் லோவ், மாணவரிடம் துப்பாக்கி இருந்ததைப் பார்த்ததும், உடனடியாக அசம்பாவிதம் நடப்பதைத் தடுக்க வேண்டும் என்று எண்ணினார்.

மாணவர் தற்கொலை செய்துகொள்ள ஒரே ஒரு ரவையுடன் பள்ளிக்கு வந்தார். ஆனால் துப்பாக்கியை அவரால் சுட முடியவில்லை.

மாணவரைக் கண்டதும் அவர்மீது பரிதாபம் கொண்டதாகக் கூறினார் லோவ். அவருக்கு ஆறுதல் தர அரவணைத்ததாகக் கூறினார்.

பள்ளிக்குத் துப்பாக்கியைக் கொண்டு வந்த மாணவருக்கு மூவாண்டு நன்னடத்தைக் கண்காணிப்பு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. மாணவர் போதைப்பொருள் மறுவாழ்வுத் திட்டத்திற்கும், மனநல ஆலோசனைக்கும் உட்படுத்தப்படுவார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்