Images
  • sputnik v
    (கோப்புப் படம்: REUTERS/Shamil Zhumatov)

வியட்நாம், Sputnik V தடுப்புமருந்தின் முதல் சோதனைத் தொகுப்பை உற்பத்தி செய்துள்ளது

வியட்நாம், Sputnik V தடுப்புமருந்தின் முதல் சோதனைத் தொகுப்பை உற்பத்திச் செய்துள்ளது.

VABIOTECH என்ற வியட்நாமிய மருந்தாக்க நிறுவனமும், RDIF என்ற ரஷ்ய நிதியமும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் அதுபற்றி அறிவிக்கப்பட்டது.

ரஷ்யா உருவாக்கிய COVID-19 தடுப்புமருந்து Sputnik V.

சோதனைத் தொகுப்பின் முதல் மாதிரிகள் ரஷ்யாவிலுள்ள Gamaleya நிலையத்துக்கு அனுப்பப்படும். அங்கு, அதன் தரம் சோதிக்கப்படும் என நிதியமும் நிறுவனமும் சேர்ந்து தகவல் அளித்தன.  

Top