Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

COVID-19 பரவலால் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளது: ஐக்கிய நாட்டு நிறுவனம்

COVID-19 நோய்ப்பரவலால் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
COVID-19 பரவலால் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளது: ஐக்கிய நாட்டு நிறுவனம்

(படம்:Try Sutrisno Foo)

COVID-19 நோய்ப்பரவலால் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று அனுசரிக்கப்படும் பெண்களுக்கு எதிரான வன்முறையைத் துடைத்தொழிக்கும் அனைத்துலக தினத்தை முன்னிட்டு நிறுவனம் நடத்திய ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

நோய்ப்பரவலால் மேற்கொள்ளப்பட்ட முடக்கநிலை நடவடிக்கைகளின் பின்னணியில் குடும்ப வன்முறையும் பெண் கொலைச் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.

அவற்றின் தீவிரமும் அதிகரித்துள்ளதாக நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்தது.

உலக அளவில் பெண்களின் கொலைகளில் சுமார் 40 விழுக்காடு, அவர்களது கணவராலோ காதலராலோ செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

வன்முறை, பருவநிலை தொடர்பான இயற்கைப் பேரிடர், உணவுப் பாதுகாப்பின்மை ஆகியவற்றின் காரணமாகவும் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளது.

அதுபோன்ற நெருக்கடிகளில் 70 விழுக்காட்டுக்கும் அதிகமான பெண்கள், பாலின வன்முறையை எதிர்நோக்குவதாகத் தெரிவிக்கப்பட்டது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்