Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

இணையத் தாக்குதல், ஊடுருவல் குறித்து அமெரிக்கா நடத்தும் பன்னாட்டு இணையச் சந்திப்பு

இணையத் தாக்குதல், ஊடுருவல் முதலியவற்றை எதிர்ப்பது குறித்து அமெரிக்கா நடத்தும் இணையச் சந்திப்பில் சுமார் 30 நாடுகள் கலந்துகொள்கின்றன.

வாசிப்புநேரம் -

இணையத் தாக்குதல், ஊடுருவல் முதலியவற்றை எதிர்ப்பது குறித்து அமெரிக்கா நடத்தும் இணையச் சந்திப்பில் சுமார் 30 நாடுகள் கலந்துகொள்கின்றன.

ஆனால், ரஷ்யாவுக்கு அமெரிக்கா அழைப்பை விடுக்கவில்லை.

வெள்ளை மாளிகையில் இடம்பெறும் அந்த இரண்டு-நாள் சந்திப்பு இன்று பின்னேரம் முடிவடையும்.

பிரிட்டன், ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அதில் கலந்துகொள்கின்றன.

கடந்த ஓராண்டில், அமெரிக்காவைக் குறிவைத்து, பல இணையத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

பலவற்றில் ரஷ்யாவுக்குத் தொடர்பிருந்ததாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

ஆனால், அந்தக் குற்றச்சாட்டுகளை ரஷ்யா மறுத்து வருகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்