Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சோதனையைச் சாதகமாக்கிக் கொண்ட பிலிப்பீன்ஸ் மக்கள்

பிலிப்பீன்ஸில் தால் எரிமலைக் குமுறல், அந்த வட்டாரத்தில் வசிப்போரின் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது.

வாசிப்புநேரம் -
சோதனையைச் சாதகமாக்கிக் கொண்ட பிலிப்பீன்ஸ் மக்கள்

(படம்: Reuters)

பிலிப்பீன்ஸில் தால் எரிமலைக் குமுறல், அந்த வட்டாரத்தில் வசிப்போரின் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது.

ஆனால் பினான்(Binan) நகர மக்கள்மட்டும் புத்தாக்கச் சிந்தனையோடு அதிலிருந்து ஆதாயம் தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

சென்ற வாரம் தால் எரிமலை புகையையும், சாம்பலையும் கக்கத் தொடங்கியது.

அதனால் சாம்பல் பூச்சு படர்ந்து காணப்படுகிறது பினான் நகரம்.

சலித்துக்கொண்டே சுத்தம் செய்வதற்குப் பதில் அந்தச் சாம்பலைப் பயன்படுத்திச் செங்கற்களைச் செய்ய முனைந்துள்ளனர் நகரவாசிகள்.

பிளாஸ்டிக் கழிவு, மணல், சிமெண்ட் ஆகியவற்றுடன் எரிமலைச் சாம்பலைக் கலந்து அவை உருவாக்கப்படுகின்றன.

நாளொன்றுக்குச் சுமார் 5,000 செங்கற்கள்.

உள்ளூர் கட்டுமானத் திட்டங்களில் அவை பயன்படுத்தப்படும்.

அக்கம்பக்க நகரங்களில் நிவாரணத்துக்குப் பிந்திய மறுசீரமைப்புப் பணிகளுக்கும் அந்தச் செங்கற்களைக் கொடுத்து உதவுவது பினான் மக்களின் திட்டம்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல எரிமலைச் சாம்பல் செங்கற்களால் பிளாஸ்டிக் கழிவுகளுக்கும் தீர்வுகாண முடியும்.

பிலிப்பீன்ஸில் ஒவ்வோர் ஆண்டும் உருவாகும் பிளாஸ்டிக் கழிவின் அளவு அதிர்ச்சியூட்டக்கூடிய அளவில் உள்ளது.

அவற்றில் ஒரு முறை மட்டும் பயன்படும் பிளாஸ்டிக் உறைகளின் எண்ணிக்கை சுமார் 60 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்