Images
  • volkswagen
    (படம்: AFP/MANJUNATH KIRAN)

Volkswagen நிறுவனத்தின் 'பீட்டல்' ரக கார்களின் விற்பனை நிறுத்தம்

Volkswagen நிறுவனத்தின் கார் என்று சொல்லும்போது வண்டுகளின் உருவம் போன்றே இருக்கும் கார் வகையே முதலில் நினைவுக்கு வரும்.

வளைந்த மேற்கூரையுடன் 'பீட்டல்' (Beetle) என்று செல்லமாக அழைக்கப்படும் இந்தக் கார் Volkswagen நிறுவனத்தின் சின்னம் என்றுகூடச் சொல்லலாம்.

ஆனால், பீட்டல் ரகக் கார்களை இனி சாலைகளில் பார்ப்பது அரிதாகிவிடும்.

காரணம் பீட்டில் கார்களின் விற்பனையை நிறுத்திக்கொள்ளப்போவதாக நிறுவனம் நேற்று அறிவித்தது.

குடும்பமாகச் செல்வதற்கேற்ற வசதியைக் கொண்ட பெரிய கார்களை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்தவுள்ள நிறுவனம் பீட்டில் ரகக் கார்களைத் தயாரிக்கவே போவதில்லை என்று தெரிவித்தது.

கடந்த 70 ஆண்டுகளாக பீட்டில் ரகக் கார்களை விற்றுவரும் நிறுவனம், அந்தக் காரின் விற்பனையை நிறுத்துவதற்குமுன் இரு வகைக் கார்களை இறுதியாக விற்பனைக்கு விட்டுள்ளது.

Top