Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

தேசிய அளவிலான அவசரகால நிலையை அறிவித்துள்ள அதிபர் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், தேசிய அளவிலான அவசரகால நிலையை அறிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
தேசிய அளவிலான அவசரகால நிலையை அறிவித்துள்ள அதிபர் டிரம்ப்

(படம்: AFP/Guillermo Arias)

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், தேசிய அளவிலான அவசரகால நிலையை அறிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கும் மெக்சிகோவுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் சுவர் எழுப்ப, நிதிகளைப் பெறவேண்டி, அவர் அந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

அதுபற்றி வெள்ளை மாளிகையில் பேசிய அவர், அமெரிக்காவுக்கும் மெக்சிகோவுக்கும் இடையிலான எல்லைப் பகுதி வழி, போதைப்பொருட்கள், குண்டர் கும்பல்கள், ஆள் கடத்தல் கும்பல்கள், கள்ளக் குடியேறிகள் ஆகியோர் அமெரிக்காவிற்குள் நுழைவதாகக் கூறினார்.

அவசர நிலை ஒன்றை அறிவிப்பதன் மூலம், அதிபரானவர், காங்கிரஸின் அனுமதியின்றி, அரசாங்க நிதிகளைப் பெறமுடியும்.

அதன்வழி தற்போது அதிபர் டிரம்ப், தமது எல்லைச் சுவருக்கான ஆறு பில்லியன் டாலரைப் பெறவிருக்கிறார்.

அமெரிக்காவின் தேசிய அவசரக்காலச் சட்டத்தின் கீழ், அதிபர் ஒருவர் குறிப்பிட்ட காரணங்களுக்காக, தேசிய அளவில் அவசர நிலையை அறிவிக்க அனுமதி பிறப்பிக்கப்படுகின்றது.

இருப்பினும், நியூயார்க், கலிபோர்னியா உள்ளிட்ட பல மாநிலங்கள், அதிபரின் செயலை எதிர்த்து வழக்குத் தொடுக்க முடிவெடுத்துள்ளன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்