Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

போர் வீரர்களின் சடலங்களைத் திருப்பி அனுப்புவது பற்றி அமெரிக்கா, வட கொரியா சந்திப்பு

கொரியப் போரில் இறந்த அமெரிக்க இராணுவ வீரர்களின் சடலங்களை அமெரிக்காவிற்கு அனுப்பி வைப்பதைப் பற்றிப் பேச அமெரிக்கப் பேராளர் குழுவோடு பேச வட கொரிய முன்வந்துள்ளது.

வாசிப்புநேரம் -
போர் வீரர்களின் சடலங்களைத் திருப்பி அனுப்புவது பற்றி அமெரிக்கா, வட கொரியா சந்திப்பு

(படம்: Andrew Harnik/Pool via Reuters)

கொரியப் போரில் இறந்த அமெரிக்க இராணுவ வீரர்களின் சடலங்களை அமெரிக்காவிற்கு அனுப்பி வைப்பதைப் பற்றிப் பேச அமெரிக்கப் பேராளர் குழுவோடு பேச வட கொரிய முன்வந்துள்ளது.

அமெரிக்காவின் தேசிய பிரிவிற்கான தொடர்பாளர் நேற்று (ஜூலை 12) அதனைத் தெரிவித்தார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பெயோவுடன் (Mike Pompeo) இதற்கு முன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகளின்போது சடலங்களை அனுப்பி வைப்பது பற்றி ஜூலை 12-ஆம் தேதியன்று சந்திக்க வட கொரியாவின் துணைத் தலைவர் கிம் யோங் சோல் இணக்கம் தெரிவித்திருந்தார்.

ஆனால், அந்தச் சந்திப்பு இடம்பெறவில்லை.

ஆக, வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று சந்திக்கலாம் என்று வட கொரியாவிடமிருந்து நேற்று தகவல் வந்ததாக அமெரிக்காவின் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா சந்திப்பிற்குத் தயாராக இருக்கும் என்றும் அவர் கூறினார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்