Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஒரு நாளில் குறைந்தது 6 முறை கைகளைக் கழுவ வேண்டும் : ஆய்வு

ஒரு நாளில் குறைந்தது 6 முறை கைகளைக் கழுவ வேண்டும் என்று பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நடத்திய சோதனை ஒன்றில் தெரிய வந்துள்ளது.

வாசிப்புநேரம் -
ஒரு நாளில் குறைந்தது 6 முறை கைகளைக் கழுவ வேண்டும் : ஆய்வு

படம்: AFP/Anthony Wallace

ஒரு நாளில் குறைந்தது 6 முறை கைகளைக் கழுவ வேண்டும் என்று பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் நடத்திய சோதனை ஒன்றில் தெரிய வந்துள்ளது.

2006க்கும் 2009க்கும் இடைப்பட்ட காலத்தில் புதிய கொரோனா வகையைச் சேர்ந்த ஏனைய கிருமிகளின் பரவல் குறித்த தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டன.

ஆய்வில் பங்கேற்ற சுமார் 1,700 பேர், குறைந்தது 6 முறை கைகளைக் கழுவும்போது கிருமி தொற்றும் சாத்தியம் கணிசமாய்க் குறைந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

அதேவேளையில், ஒரு நாளில் 10 முறைக்கும் மேல் கைகளைக் கழுவுவதால் கிருமித்தொற்று அபாயம் மேலும் குறைவதில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது.

பெரும்பாலும் சாதாரண சளிக்காய்ச்சலை ஏற்படுத்தும் கொரோனா குடும்பத்தைச் சேர்ந்த கிருமி வகை, சவர்க்காரம், தண்ணீரால் எளிதாக அழிக்கப்பட்டுவிடும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்