Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

சீனாவுக்குத் தகுந்த பதிலடி கொடுக்க விரும்பும் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஹாங்காங் மீதான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை முன்னிட்டுச் சீனாவுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
சீனாவுக்குத் தகுந்த பதிலடி கொடுக்க விரும்பும் டிரம்ப்

படம்: AFP/POOL

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், ஹாங்காங் மீதான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை முன்னிட்டுச் சீனாவுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

அதுகுறித்துத் திட்டமிட்டு வருவதாகக் கூறிய அவர், இந்த வார இறுதிக்குள் அதை அறிவிக்கப்போவதாகச் சொன்னார்.

சீனா மீது தடைகள் விதிக்கப்படுமா அல்லது சீன மக்களுக்கான விசா வழங்குவது கடுமையாக்கப்படுமா என்ற கேள்விக்குத் திரு. டிரம்ப் பதில் கூறவில்லை.

ஹாங்காங் மீது சீனா விதிக்கவிருக்கும் தேசிய பாதுகாப்புச் சட்டம், அதிபர் டிரம்ப்புக்கு அதிருப்தி அளித்திருப்பதாக வெள்ளை மாளிகைப் பேச்சாளர் Kayleigh McEnany கூறினார்.

திரு. டிரம்ப்பின் பொருளியல் ஆலோசகர், லாரி குட்லோ (Larry Kudlow), சீனாவின் நடவடிக்கைகள் மிகவும் கவலையளிப்பதாகக் குறிப்பிட்டார்.

சீனாவில் உள்ள முக்கியப் பொருள்களை உற்பத்தி செய்துவரும் அமெரிக்க நிறுவனங்களை எவ்வாறு அமெரிக்காவுக்குத் திரும்பக் கொண்டுவருவது என்பதுபற்றி டிரம்ப் நிர்வாகம் ஆராய்ந்து வருகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்