Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

வட கொரியாவிலிருந்து அணுவாயுதங்களை அகற்றுவதில் தொடர்ந்து கவனம் செலுத்தப்படும் : அமெரிக்கா

வட கொரியாவிலிருந்து அணுவாயுதங்களை அகற்றுவதில், தொடர்ந்து கவனம் செலுத்திவருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
வட கொரியாவிலிருந்து அணுவாயுதங்களை அகற்றுவதில் தொடர்ந்து கவனம் செலுத்தப்படும் : அமெரிக்கா

(படம்: AFP/SAUL LOEB)

வட கொரியாவிலிருந்து அணுவாயுதங்களை அகற்றுவதில், தொடர்ந்து கவனம் செலுத்திவருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சீன அதிபர் சி சின்பிங், வட கொரியாவுக்கு நாளைமறுநாள் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, வாஷிங்டன் அதனைத் தெரிவித்தது.

அணுவாயுதக் களைவின் தொடர்பில், வாஷிங்டனும் பியோங்யாங்கும் எதிர்பார்த்த முன்னேற்றத்தை எட்டாத நிலையில், சீன அதிபரின் பயணம் இடம்பெறவிருக்கிறது.

இருப்பினும், வட கொரியாவிடமிருந்து அணுவாயுதங்களை அகற்றுவதில் சீனாவோடு அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் கடப்பாடு கொண்டிருப்பதாக வாஷிங்டன் குறிப்பிட்டது.

தென் கொரியாவின் Yonhap செய்தி நிறுவனத்திடம், அமெரிக்க வெளியுறவு அமைச்சுப் பேச்சாளர் அதனைத் தெரிவித்தார்.

கொரியத் தீபகற்பத்தை அணுவாயுதமற்ற வட்டாரமாக மாற்றுவதற்கு அளித்த உறுதிமொழியை, வட கொரியத் தலைவர் நிறைவேற்றுவார் என, அதிபர் டிரம்ப் நம்பிக்கை கொண்டிருப்பதாக அவர் கூறினார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்