Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஜோ பைடனின் பதவியேற்பு - முடக்கப்பட்டுள்ள வாஷிங்டன்

அமெரிக்காவில், அடுத்த அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. ஜோ பைடனின் பதவியேற்பை முன்னிட்டு, வாஷிங்டன் பாதுகாப்புக் காரணங்களுக்காக முடக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

அமெரிக்காவில், அடுத்த அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு. ஜோ பைடனின் பதவியேற்பை முன்னிட்டு, வாஷிங்டன் பாதுகாப்புக் காரணங்களுக்காக முடக்கப்பட்டுள்ளது.

பதவியேற்பு இம்மாதம் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அங்கு 20,000க்கும் மேற்பட்ட தேசியக் காவல்படை வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றம் அமைந்துள்ள Capitol Hill பகுதியில் புதிய தடுப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.

வாஷிங்டன், பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்நோக்குவதாகக் காவல்துறை குறிப்பிட்டது.

இந்நிலையில், பதவியேற்பு நிகழ்ச்சி, ஒழுங்கான, பாதுகாப்பான முறையில் நடைபெறுமென துணையதிபர் மைக் பென்ஸ் உறுதியளித்துள்ளார்.

வன்செயல் மூளக்கூடும் என்ற அச்சம் நிலவும் வேளையில், திரு. பென்ஸ், பதவியேற்பு நிகழ்ச்சிக்கான பாதுகாப்புக் கூட்டத்தில் அவ்வாறு தெரிவித்தார்.

வாஷிங்டனின் பெரும்பாலான பகுதிகளில் தற்போது போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்