Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கல்யாணப் பரிசுப் பொருளில் வெடிகுண்டு வைத்ததன் தொடர்பில்ஆசிரியர் கைது

இந்திய காவல் துறையினர் கல்யாணப் பரிசுப் பொருளில் வெடிகுண்டு வைத்ததன் தொடர்பில் கல்லூரி ஆசிரியரைக் கைது செய்துள்ளனர்.  

வாசிப்புநேரம் -

இந்திய காவல் துறையினர் கல்யாணப் பரிசுப் பொருளில் வெடிகுண்டு வைத்ததன் தொடர்பில் கல்லூரி ஆசிரியரைக் கைது செய்துள்ளனர்.

ஒரிசாலின் பலாங்கிர் மாவட்டத்தைச் சேர்ந்த கணினிப் பொறியாளர் (26 வயது) சௌமியா சேகர் சாஹு. அவரின் மனைவி, 22 வயது ரீமா.

பிப்ரவரி 23 ஆம் தேதி சாஹூவுக்கும், ரீமாவுக்குத் திருமணம் நடந்தது. அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட பரிசுப் பொருட்களை 5 நாட்களுக்குப் பிறகு பிரித்துப் பார்த்தார் சாஹூ.

அப்போது குண்டு வெடித்தது. புதுமாப்பிள்ளை சாஹூவும் அவருடைய பாட்டியும் அதில் மாண்டனர்.

புதுமணப் பெண் ரீமா பலத்த காயமுற்றார்.

அந்தக் குண்டுவெடிப்பின் தொடர்பில், சாஹூவின் அம்மாவுடன் கல்லூரியில் பணிபுரிந்த புன்ஜிலால் மெஹர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஒரிஸா மாநிலக் காவல் துறை குறிப்பிட்டது.

சாஹூவின் தாயார் ஒரு கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி வருகிறார்.

அதே கல்லூரியில் முன்னர் முதல்வராக இருந்தவர் புன்ஜிலால் மெஹர்.

பணி மூப்பு அடிப்படையில் புன்ஜிலால் மெஹரைப் பதவியிறக்கம் செய்து விட்டு சாஹூவின் தாயார் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டார்.

அதனால் புன்ஜிலால் கடுமையான ஆத்திரத்தில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், சாஹூவின் தாயாரை வஞ்சம் தீர்ப்பதற்காகப் பரிசுப் பொருளாகக் குண்டு அனுப்பும் திட்டத்தைத் தீட்டியுள்ளார் புன்ஜிலால்.

இணையத்தில் தகவல்களைச் சேகரித்து வெடிகுண்டு செய்யக் கற்றுக்கொண்ட புன்ஜிலால், சந்தேகம் வராமல் இருக்க அருகிலுள்ள வேறு ஊருக்குச் சென்று பரிசுப் பொட்டலத்தை அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.

100க்கும் மேற்பட்டோரை விசாரித்த பிறகு, காவல்துறை அதிகாரிகள் புன்ஜிலால் மெஹரைக் கைது செய்தனர்.




  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்