Images
  • westerdam (1)
    REUTERS/Stringer)

கம்போடியத் துறைமுகத்தில் Westerdam சொகுசுக் கப்பலைவிட்டு வெளியேறவுள்ள பயணிகள்

கம்போடியாவின் சிஹனூக்வில் (Sihanoukville )துறைமுகத்தில் அணைந்திருக்கும், Westerdam சொகுசுக்கப்பலைவிட்டு, பயணிகள் இன்று வெளியேறவிருக்கின்றனர்.

கப்பலில் மொத்தம் 1,400 பயணிகளும் 800 ஊழியர்களும் உள்ளனர்.

அவர்களிடம் செய்யப்பட்ட பரிசோதனைகளில் யாருக்கும் கிருமித்தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

Westerdam சொகுசுக்கப்பல் அதன் பயணத்தைக் கடந்த மாதம் சிங்கப்பூரில் தொடங்கியது.

அதையடுத்து, ஹாங்காங்கில் நூற்றுக்கணக்கான பயணிகள் கப்பலில் ஏறினர்.

ஹாங்காங்கில் உள்ள 56 பேருக்குக் கிருமித்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து Westerdam கப்பலை ஐந்து துறைமுகங்கள் ஏற்க மறுத்தன.

கப்பலின் பயணிகளுக்கும் COVID-19 கிருமி தொற்றியிருக்கலாம் என்ற சந்தேகமே அதற்குக் காரணம். 

Top