Images
  • Westminster Knife
    (படம்: Twitter/Gareth Milner)

லண்டன் அரசாங்க அலுவலகம் அருகே கத்திக் குத்துத் தாக்குதல் - ஒருவர் படுகாயம்


லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் (Westminster) வட்டாரத்திலிருக்கும் அரசாங்க அலுவலகத்தின் அருகே ஆடவர் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டுள்ளார்.

பிற்பகல் சுமார் 1 மணிக்கு மார்ஷம் (Marsham) சாலையில் கத்தி ஏந்திய ஆடவர் இருப்பதாக தகவல் பெற்ற அவசரச் சேவை அதிகாரிகள் அங்கு விரைந்தனர்.


சம்பவ இடத்தில் கத்தியால் படுகாயம் அடைந்த ஆடவர் ஒருவரை அவர்கள் கண்டனர்.

உயிருக்குப் போராடிய அவருக்குச் சம்பவ இடத்திலேயே முதலுதவி அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் தொடர்பில் ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.


சம்பவத்துக்கும் அரசாங்க அலுவலகத்திற்கும் தொடர்புள்ளதா என்பது குறித்து இன்னும் தெளிவாக தெரியவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆனால் அது பயங்கரவாதம் தொடர்பானது என்பதைக் குறிக்கும் ஆதாரம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் காவல்துறை கூறியுள்ளது.

 

Top