Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

Whatsapp செயலியின் புதிய நிபந்தனைகள் - எதற்கு ஒப்புக்கொள்ளச் சொல்கின்றன?

Facebook நிறுவனத்தின் கீழ் செயல்படும் WhatsApp செயலி, சுமார் 2 பில்லியன் பயனீட்டாளர்களுக்கு தனிநபர் தொடர்பிலான அதன் புதிய நிபந்தனைகளைப் பற்றித் தகவல் அளித்துள்ளது.

வாசிப்புநேரம் -

Facebook நிறுவனத்தின் கீழ் செயல்படும் WhatsApp செயலி, சுமார் 2 பில்லியன் பயனீட்டாளர்களுக்கு தனிநபர் தொடர்பிலான அதன் புதிய நிபந்தனைகளைப் பற்றித் தகவல் அளித்துள்ளது.

குறுந்தகவல் அனுப்பும் செயலியான WhatsAppஐத் தொடர்ந்து பயன்படுத்தவேண்டுமானால், பயனீட்டாளர்கள் அந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

இது உலகளவில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அதைக் கடுமையாகச் சாடியிருக்கும் பலர், Telegram போன்ற வேறு தளங்களுக்கு மாறுவதாகக் கூறியுள்ளனர்.

WhatsApp செயலியின் புதிய நிபந்தனைகள் என்னென்ன?

  • பயனீட்டாளருக்கு Instagram, Facebook போன்ற நிறுவனத்தின் மற்ற தளங்களில் கணக்கு இல்லாவிட்டாலும், அவர்களைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ளும் உரிமை Whatsappஇடம் இருக்கும்.
  • இதற்கு முன் அதனை அனுமதிக்கும் உரிமை பயனீட்டாளர்களிடம் இருந்தது. அடுத்தமாதம் 8ஆம் தேதியிலிருந்து, பயனீட்டாளர்களுக்கு அந்த உரிமை வழங்கப்படமாட்டாது. அது கட்டாயமாக்கப்படும்.

Facebook தளம் உங்கள் WhatsAppஇல் இடம்பெற்ற குறுஞ்செய்திகளைப் படிக்க முடியுமா?

  • இல்லை. Encryption எனும் முறையின் மூலம் அது பாதுகாக்கப்படும். ஆனால், உங்கள் தொடர்புத் தகவல்கள், நீங்கள் இருக்கும் இடம், உங்கள் நிதி சம்பந்தப்பட்ட தகவல்கள் போன்ற தனிப்பட்ட தரவுகளைக் காணும் உரிமை WhatsApp செயலியிடம் இருக்கும்.

Facebook நிறுவனத்திற்கு அவ்வாறான தனிப்பட்ட தகவல்கள் எதற்குத் தேவைப்படுகிறது?

ஒருவரது தனிப்பட்ட விருப்பங்கள், பழக்க வழக்கங்கள் போன்றவற்றைக் கண்காணிப்பதன் மூலம் அவர்களுக்கு ஏற்றவாறு பொருள்களின் விளம்பரத்தை நிறுவனம் காட்ட முடியும். அவற்றைக் காணும் பயனீட்டாளர்கள் அவற்றை வாங்கும் வாய்ப்புகள் மேலும் அதிகமாகும்.

மொத்தத்தில் Facebook நிறுவனத்தின் வருவாய் அதிகரிக்கும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்