Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

WhatsApp செயலி அதன் கொள்கை விதிகளை மேம்படுத்தும் நடைமுறையைத் தள்ளிவைத்துள்ளது

WhatsApp செயலி தனது கொள்கை விதிகளை மேம்படுத்தும் நடைமுறையை வரும் மே மாதம் 15-ஆம் தேதி வரை தாமதப்படுத்தியுள்ளது.

வாசிப்புநேரம் -
WhatsApp செயலி அதன் கொள்கை விதிகளை மேம்படுத்தும் நடைமுறையைத் தள்ளிவைத்துள்ளது

(படம்: REUTERS/Dado Ruvic/Files)

WhatsApp செயலி தனது கொள்கை விதிகளை மேம்படுத்தும் நடைமுறையை வரும் மே மாதம் 15-ஆம் தேதி வரை தாமதப்படுத்தியுள்ளது.

வர்த்தகப் பரிவர்த்தனையைப் பெருக்கும் நோக்கில் பயனீட்டாளர்கள் சில விதிகளுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று WhatsApp கூறியிருந்தது.

பயனீட்டாளர்கள் சிலருடைய தகவல்களை Facebook நிறுவனத்துடன் பகிர்ந்துகொள்ளும் உரிமை தனக்கு உண்டு என்று WhatsApp விதிமுறையைப் புதுப்பித்திருந்தது.

உலக அளவில், பயனீட்டாளர்களிடம் அதற்குக் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது.

கவலையடைந்த பயனீட்டாளர்கள் பலர் Telegram, Signal போன்ற செய்திப் பரிமாற்றச் செயலிகளுக்கு மாறினர்.

கடந்த ஓராண்டாக, WhatsApp செயலியில் வர்த்தக நடைமுறைக்குரிய அம்சங்களை Facebook ஆராய்ந்து வருகிறது.

பயனீட்டாளர்களின் தொலைபேசி எண், இணையக் கட்டமைப்பு எண் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை WhatsApp ஏற்கனவே Facebook நிறுவனத்துக்குப் பகிர்ந்து வருகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்