Images
  • Whatsapp Limits
    (படம்: REUTERS/Thomas White)

WhatsApp நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள மறுப்போருக்கு குறுந்தகவல் சேவை முடக்கப்படும்

பயனீட்டாளர்கள் புதுபிக்கப்பட்ட தனது நிபந்தனைகளுக்கு மே 15ஆம் தேதிக்குள் ஒப்புதல் வழங்காவிட்டால், அவர்களின் குறுந்தகவல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று WhatsApp தெரிவித்துள்ளது.

நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் வரை பயனீட்டாளர்களின் WhatsApp கணக்கு முடக்கப்படும் என்று BBC செய்தி வெளியிட்டுள்ளது.

120 நாளுக்கு கணக்குகள் செயல்பாட்டில் இல்லாவிட்டால் அவை அகற்றப்படும் என்று கூறப்பட்டது.

கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட புதிய நிபந்தனைகளுக்குப் பயனீட்டாளர்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

WhatsApp செயலியை நிர்வகிக்கும் Facebook நிறுவனத்துடன் கூடுதல் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்காகவே புதிய நிபந்தனை விதிக்கப்படுவதாகக் கருதப்பட்டது.

பயனீட்டாளர்களின் IP முகவரி, தளத்தின் மூலம் வாங்கப்படும் பொருள்களைப் பற்றிய விவரங்கள் போன்றவற்றைத் தற்போது Facebook உடன் பகிர்ந்துகொள்கிறது WhatsApp.

ஆனால் ஐரோப்பாவிலும் பிரிட்டனிலும் உள்ள தனிநபர் பாதுகாப்புச் சட்டங்கள் அதைத் தடுக்கின்றன.

WhatsAppஇன் நிபந்தனைகள் குறித்த அறிக்கையால், பலரும் Telegram, Signal தளங்களுக்கு மாறத் தொடங்கியுள்ளனர்.

புதிய நிபந்தனைகளை நடைமுறைப்படுத்துவதைத் தள்ளிவைத்த WhatsApp, தற்போது மாற்றங்கள் குறித்து பயனீட்டாளர்களுக்குத் தெரிவிக்கும் நடைமுறையை மாற்றியுள்ளது. 

Top