Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

WhatsApp செயலியின் புதிய அம்சங்கள் யாவை?

WhatsApp செயலியின் நிர்வாகிகள் அதன் குழுத் தகவல் பரிமாற்றத் தளத்தில்  புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளனர். 

வாசிப்புநேரம் -

WhatsApp செயலியின் நிர்வாகிகள் அதன் குழுத் தகவல் பரிமாற்றத் தளத்தில் புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளனர்.

இனி, குழுத் தகவல் பரிமாற்றத் தளத்தில் வரும் அளவில்லாத் தகவல்களைச் சமாளிக்க முடியவில்லையென்றால், கவலை வேண்டாம்.

அந்தக் குழுவில் இருக்க விருப்பமில்லையென்றால், பயனீட்டாளர்கள் நிரந்தரமாக அங்கிருந்து வெளியேறலாம்.

மீண்டும் அந்தக் குழுவில் சேர்க்கப்படுவார்கள் எனும் கவலையும் அவர்களுக்கு வேண்டாம்.

மேலும், அந்தச் செயலியின் வாயிலாகப் புதிய குழுவை உருவாக்கும் நிர்வாகிகளான பயனீட்டாளர்கள் தாங்கள் உருவாக்கிய குழுவைவிட்டு வெளியேற்றப்பட முடியாது.

WhatsApp செயலியின் வாயிலாக ஒரே நேரத்தில் நிறையச் செய்திகளும் தகவல்களும் வரும்.

தனி நபருக்காக அனுப்பப்படும் தகவல், அவர்களால் பார்க்கப்படாமல் போகக்கூடும்.

அதனால், குழுத் தகவல் பரிமாற்றத் தளத்தில் தங்களுக்காக வரும் தகவல்களை விரைவில் கண்டுபிடிக்கும் முறையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதனால், பயனீட்டாளர்கள் தங்களுக்காக வரும் தகவலைக் காணத் தவறமாட்டார்கள்.

1 பில்லியனுக்கு மேற்பட்டோர் பயன்படுத்தும் WhatsApp செயலி, மக்களிடையே மிகவும் பிரபலமானது.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்