Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஹாங்காங் சட்டமன்றத் தேர்தல் ஒத்திவைப்பு - அமெரிக்கா கண்டனம்

சட்டமன்றத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான ஹாங்காங்கின் முடிவுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
ஹாங்காங் சட்டமன்றத் தேர்தல் ஒத்திவைப்பு - அமெரிக்கா கண்டனம்

(கோப்புப் படம்: AFP/Anthony WALLACE)

சட்டமன்றத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான ஹாங்காங்கின் முடிவுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.

அந்தச் செயல், ஜனநாயக நடைமுறைகளையும் சுதந்திரத்தையும் கீழறுப்பதாய் வெள்ளை மாளிகைப் பேச்சாளர் தெரிவித்தார்.

ஹாங்காங்கிற்கு பெய்ச்சிங் வழங்கிய பல உறுதிமொழிகளை மீறிவருவதைப் பேச்சாளர் சுட்டினார்.
2047ஆம் ஆண்டுவரை ஹாங்காங் மக்களுக்குப் பல சுதந்திரங்களை வழங்குவதற்கு ஒப்புக்கொண்டதும் அதில் அடங்கும்.

இந்நிலையில், ஜெர்மனியில் வாழும் ஹாங்காங்-வாசிகளைத் திருப்பி அனுப்புவதற்கான ஒப்பந்தத்தைத் தற்காலிகமாக பெர்லின் நிறுத்தியுள்ளது.

எதிர்த்தரப்பு வேட்பாளர்களைத் தேர்தலில் போட்டியிடத் தகுதி பெறாமல் செய்வதும் சட்டமன்றத் தேர்தலை ஒத்திவைப்பதும் ஹாங்காங் மக்களின் உரிமைகளை மீறும் நடவடிக்கைகள் என ஜெர்மனி குறைகூறியுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்