Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

வெள்ளை மாளிகைப் பேச்சாளர் இம்மாத இறுதியில் பதவி விலகல்

வெள்ளை மாளிகைப் பேச்சாளர் சாரா சாண்டர்ஸ், இம்மாத இறுதியில் பதவி விலகுவார் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
வெள்ளை மாளிகைப் பேச்சாளர் இம்மாத இறுதியில் பதவி விலகல்

(படம்: Reuters)

வெள்ளை மாளிகைப் பேச்சாளர் சாரா சாண்டர்ஸ், இம்மாத இறுதியில் பதவி விலகுவார் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகைப் பேச்சாளர் சங்கத்துக்கு தினமும் வழங்கிவந்த விவரங்களைத் தாம் நிறைவுசெய்துகொள்வதாகத் 36 வயது திருமதி சாண்டர்ஸ் குறிப்பிட்டார்.

தாம் இதுவரை ஈடுபட்டிருந்த பணி தமக்கு வாழ்நாள் முழுவதும் கௌரவத்தை அளிக்கக்கூடியது என்றார் அவர்.

திருமதி. சாண்டர்ஸின் பங்களிப்புக்கு அதிபர் டிரம்ப் நன்றி தெரிவித்துக்கொண்டார்.

வெள்ளை மாளிகையின் அடுத்த பேச்சாளர் யார் என்பது தொடர்பான விவரங்களைத் திரு. டிரம்ப் வெளியிடவில்லை.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்