Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

வெள்ளை மாளிகை வெளியே வலுவிழந்த இனவாதப் பேரணி

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில், வெள்ளை மாளிகைக்கு வெளியே, வெள்ளை இன மேலாதிக்கத்திற்கு ஆதரவாக நடந்த பேரணி, குறைவான பங்கேற்பாளர்களுடன் அதிக ஆர்ப்பாட்டமின்றி முடிவுற்றது.

வாசிப்புநேரம் -
வெள்ளை மாளிகை வெளியே வலுவிழந்த இனவாதப் பேரணி

(படம்: REUTERS/James Lawler Duggan)

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில், வெள்ளை மாளிகைக்கு வெளியே, வெள்ளை இன மேலாதிக்கத்திற்கு ஆதரவாக நடந்த பேரணி, குறைவான பங்கேற்பாளர்களுடன் அதிக ஆர்ப்பாட்டமின்றி முடிவுற்றது.

அருகிலேயே நடந்த எதிர்ப்புப் பேரணியில் நூற்றுக் கணக்கானோர் கலந்துகொண்டனர்.

வர்ஜீனியா (Virginia) மாநிலத்தின் ஷார்லட்ஸ்வில் (Charlottesville) நகரில் ஓராண்டுக்கு முன்னர் நடந்த பேரணியை நினைவுகூரும் விதமாக நவநாஸிகள் பேரணி நடத்தினர்.

அதையொட்டி, அந்த வட்டாரத் தெருக்கள் போக்குவரத்துக்கு மூடப்பட்டதுடன், வெள்ளை மாளிகையைச் சுற்றி உலோகத் தடுப்புகளும் அமைக்கப்பட்டிருந்தன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்