Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

வெள்ளை மாளிகை அதிகாரிக்கு நோய்த்தொற்று

வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -

வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அதிபர் ஜோ பைடனுடனோ, உயர் அதிகாரிகளுடனோ பாதிக்கப்பட்டவர் தொடர்பில் வரவில்லை என்று வெள்ளை மாளிகை தெளிவுபடுத்தியது.

பாதிக்கப்பட்டவரின் அடையாளம் வெளியிடப்படவில்லை. அவருக்கு இலேசான அறிகுறிகளே இருந்தன என்று அதிபரின் செய்தித் தொடர்பாளர் சொன்னார்.

பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வெள்ளை மாளிகையில் பாதிப்புக்கு ஆளான மேலும் சிலர் பற்றியும் செய்தித் தொடர்பாளர்அறிவித்தார். ஆனால், அவர்கள் எத்தனை பேர், எப்போது பாதிப்புக்கு ஆளானார்கள் என்பது பற்றி அவர் ஏதும் சொல்லவில்லை.

இதற்கிடையே, அமெரிக்க மக்களவை நாயகர் நான்சி பெலோசி (Nancy Pelosi), தம்முடைய அலுலவலக மூத்த அதிகாரி ஒருவருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகக் கூறினார்.

ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடத்திய சந்திப்புக்குப் பிறகு அந்த அதிகாரி பாதிக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்