Images
  • sk covid
    (படம்: AFP)

உலக அளவில் கொரோனா கிருமித்தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 5 மில்லியனைக் கடந்தது

உலக அளவில், கொரோனா கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை, 5 மில்லியனைக் கடந்துவிட்டது.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பதிவானதைவிட லத்தீன் அமெரிக்காவில் கடந்த வாரம் ஆக அதிகமான கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாயின.

கொள்ளைநோய்ப் பரவலில், இது புதிய கட்டத்தைப் பிரதிபலிப்பதாக நம்பப்படுகிறது.
சீனாவில் தொடங்கிய கிருமித்தொற்று, ஐரோப்பாவிலும் அதற்கடுத்து அமெரிக்காவிலும் அதிகரித்தது.

இந்த வாரத் தொடக்கத்தில் பதிவான 91,000 நோய்த் தொற்றுச் சம்பவங்களில் மூன்றில் ஒரு பங்கு லத்தீன் அமெரிக்காவில் பதிவானவை.
அவற்றுள் பெரும்பாலானவை, பிரேசிலைச் சேர்ந்தவை. 

Top