Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

COVAX தடுப்பூசிப் பகிர்வுத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை நீக்கும் உலகச் சுகாதார நிறுவனம்

உலகச் சுகாதார நிறுவனம், COVAX தடுப்பூசிப் பகிர்வுத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை நீக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

உலகச் சுகாதார நிறுவனம், COVAX தடுப்பூசிப் பகிர்வுத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை நீக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்தியாவின் Serum Institute, தடுப்பூசிகளை வழங்க முதலில் ஒப்புக்கொண்டதை நிறைவேற்ற முடியாமல் போகலாம்.

இந்நிலையில், நிறுவனம், உலக அளவில் நோய்ப்பரவல் மீட்சிக்கான முயற்சிகளை அதிகரிக்க, G7 தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் உச்சநிலை மாநாட்டில் அதன் தொடர்பில் உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு அது கேட்டுக்கொண்டது.

G7 நாடுகளின் உதவியின்றி, இந்த சுகாதார நெருக்கடியைத் தீர்க்க முடியாது என்று நிறுவனம் எச்சரித்தது.

தடுப்பூசிகள், பரிசோதனைகள், சிகிச்சைகள் ஆகிய வளங்களுக்கான நிதியை அந்நாடுகள் கொண்டிருப்பதாக, நிறுவனத் தலைமைச் செயலாளர் டாக்டர் டெட்ரோஸ் கெப்ரியேஸஸ் (Tedros Ghebreyesus) கூறினார்.

அவருடைய கூற்றை ஆதரித்த, பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் கோர்டன் பிரவுன் (Gordon Brown), நோய்ப்பரவல் இன்னும் மோசமாகிவருவதாக எச்சரித்தார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்