Images
  • thai covid-19
    (கோப்புப் படம்: REUTERS/Athit Perawongmetha)

வரும் மாதங்களில், டெல்ட்டா வகையே கிருமித்தொற்றுக்கு முக்கிய காரணமாக இருக்கும்: உலகச் சுகாதார நிறுவனம்

COVID-19 நோயைப் பரப்பும், டெல்ட்டா கிருமி வகையே, அடுத்த சில மாதங்களில் நோய்த்தொற்றுக்கு முக்கியக் காரணமாக இருக்கும் என உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதன்முதலில் இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்ட்டா வகைக் கிருமி, இப்போது 120க்கும் அதிகமான வட்டாரங்களில் பரவியிருக்கிறது.

பல நாடுகளில் ஏற்பட்ட கிருமித்தொற்றுச் சம்பவங்களில் முக்கால்வாசிக்கு அந்த வகைக் கிருமியே காரணம் என உலகச் சுகாதார நிறுவனம் குறிப்பிட்டது.

மற்ற வகைக் கிருமிகளைக் காட்டிலும், டெல்ட்டா வகைக் கிருமியே அடுத்த சில மாதங்களில் வெகுவிரைவில் பரவி, அதிகம் பரவும் கிருமியாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அது சொன்னது.

Top