Images
  • WHO Chief
    (கோப்புப் படம்: AFP)

புதிதாக உருமாறிய கிருமி குறித்து இன்று உலகச் சுகாதார நிறுவனத்தின் அவசரநிலைக் குழு கலந்துரையாடல்

உலகச் சுகாதார நிறுவனத்தின் அவசரநிலைக் குழு, புதிதாக உருமாறிய கிருமி குறித்துக் கலந்துரையாட இன்று ஒன்றுகூடவுள்ளது.

தென்னாப்பிரிக்காவிலும் பிரிட்டனிலும் முதலில் அடையாளம் காணப்பட்ட புதுவகைக் கிருமிகள், இப்போது குறைந்தது 50 நாடுகளுக்காவது பரவியுள்ளன.

எனவே, முதலில் திட்டமிட்டதற்கு இரண்டு வாரம் முன்னதாகவே அவசரநிலைக் குழு கூடுகிறது.

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, குழுவினர் ஒன்றுகூடுவது வழக்கம்.

புதுவகைக் கிருமியால், ஒருசில தடுப்பூசிகளின் செயல்திறன் குறைந்துவிடும் என்ற அக்கறை எழுந்துள்ளது.

அத்துடன், கிருமிப்பரவலில் இருந்து மீண்டுவருவதற்குத் தடுப்பூசியே சிறந்த வழி என்ற நம்பிக்கையையும் அது கீழறுப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

உலகெங்கும் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 91 மில்லியனைக் கடந்துள்ளது.

மாண்டோர் எண்ணிக்கை 2 மில்லியனை நெருங்கிவருகிறது.

பல நாடுகளின் அரசாங்கங்கள், பொருளியலை பாதிக்கும் முடக்கநிலையையும் கடுமையான நடமாட்டக் கட்டுப்பாடுகளையும் அறிமுகம் செய்துவருகின்றன.  

Top