Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலகெங்கும் தட்டம்மையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சுமார் 4 மடங்கு அதிகரித்துள்ளது

உலகெங்கும் இந்த வருடத்தின் முதல் காலாண்டில், Measles எனப்படும் தட்டம்மையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சுமார் 4 மடங்கு அதிகரித்திருப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
உலகெங்கும் தட்டம்மையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சுமார் 4 மடங்கு அதிகரித்துள்ளது

(படம்: AFP/SEYLLOU

உலகெங்கும் இந்த வருடத்தின் முதல் காலாண்டில், Measles எனப்படும் தட்டம்மையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சுமார் 4 மடங்கு அதிகரித்திருப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்ற ஆண்டின் முதல் காலாண்டுக்கான எண்ணிக்கையுடன் ஒப்புநோக்கி, நிறுவனம் அந்தத் தகவலை வெளியிட்டது.

ஜனவரி- மார்ச் 2019 : 112,000 தட்டம்மைத் தொற்றுச் சம்பவங்கள்

உலகம் முழுவதும் பாதிப்பு காணப்பட்டாலும், ஆக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதி ஆப்பிரிக்கா. அங்கு தட்டம்மைத் தொற்றுச் சம்பவங்கள் 700 விழுக்காடு அதிகரித்துள்ளன.

அந்த விகிதம் மேலும் அதிகமாக இருக்கலாம் என்று உலகச் சுகாதார நிறுவனம் கூறியது.

உலக அளவில், பத்தில் ஒரு சம்பவம் மட்டுமே பதிவு செய்யப்படுவதை அது சுட்டியது.

ஆப்பிரிக்காவிற்கு அடுத்தபடியாக, உக்ரேன், மடகாஸ்கர், இந்தியா ஆகியவை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

அந்த நாடுகளில், "ஒரு மில்லியனுக்குப் பல்லாயிரம் பேர்" என்ற விகிதத்தில் தட்டம்மை தொற்றியிருப்பதாக நிறுவனம் கூறியது.

பிரேசில், பாகிஸ்தான், ஏமன் ஆகியவற்றிலும் பல பிள்ளைகள் அதனால் மாண்டதாக உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்தது.

தட்டம்மை வெகு விரைவில் தொற்றக்கூடிய தன்மை கொண்டது. சில நேரங்களில், அதனால் நுரையீரல், மூளை ஆகியவையும் மோசமாகப் பாதிக்கப்படலாம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்