Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

புதுவகை ஒமக்ரான் கிருமி எளிதில் பரவக்கூடியதா என்பது குறித்து எந்தத் தெளிவான தகவலும் இல்லை: உலகச் சுகாதார நிறுவனம்

புதுவகை ஒமக்ரான் கிருமி எளிதில் பரவக்கூடியதா என்பது குறித்து எந்தத் தெளிவான தகவலும் இல்லை: உலகச் சுகாதார நிறுவனம் 

வாசிப்புநேரம் -

உலகச் சுகாதார நிறுவனம், புதுவகை ஒமக்ரான் (Omicron), ஏனைய கிருமி வகைகளைக் காட்டிலும், எளிதில் பரவக்கூடியதா என்பது குறித்து எந்தத் தெளிவான தகவலும் இல்லை என்று கூறியுள்ளது.

Omicron-ஆல் பாதிக்கப்படுவோர், கடுமையாக நோய்வாய்ப்படுவார்களா போன்ற கேள்விகளுக்கும் விடை இல்லை.

இருப்பினும், Omicron கிருமி வகை அடையாளம் காணப்பட்ட பிறகு, தென்னாப்பிரிக்காவில் கிருமித்தொற்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

முதற்கட்ட தகவல்கள் அதைக் காட்டுவதாக, நிறுவனம் தெரிவித்தது.

தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகள் உட்பட, Omicron கோவிட் கிருமிக்கு எதிரான நடவடிக்கைகளின் தாக்கத்தைப் புரிந்துகொள்ள, சுகாதாரத் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் உலகச் சுகாதார நிறுவனம் பணியாற்றி வருகிறது.

தற்போதுள்ள COVID-19 பரிசோதனை முறைகள், Omicron வகையைக் கண்டறிய முடியுமா என்பது பற்றியும் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்