Images
  • Italy Covid-19
    படம்: AP Photo/Alessandra Tarantino

'COVID-19 கிருமித்தொற்றைத் தொடக்கத்திலேயே கட்டுப்படுத்தும் சந்தர்ப்பத்தை உலக நாடுகள் நழுவவிட்டுவிட்டன

உலகையே உலுக்கி வரும் COVID-19 கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் அனைத்து அரசாங்கங்களும் காலம் கடத்தவேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறித்தியுள்ளது.

தொடக்கத்திலேயே அதைக் கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்பை உலக நாடுகள் நழுவவிட்டதாக நிறுவனத்தின் தலைவர் திரு. டெட்ரொஸ் கெபிரேய்சஸ் (Tedros Ghebreyesus) குறைகூறினார்.

இருப்பினும், நிலைமையைச் சரி செய்வதற்கு இரண்டாவது சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

150 நாடுகளில் நூற்றுக்கும் குறைவானவர்களே பாதிக்கப்பட்டிருப்பதை அவர் சுட்டினார்.

பல்வேறு நாடுகள் முழுமையாகத் தங்களையே முடக்கிக்கொண்டிருப்பதும் வரவேற்கத்தக்கது என்றார் திரு. கெபிரேய்சஸ்.

எனினும், அத்தகைய நடவடிக்கைகள் மட்டும் போதாது என்ற அவர், பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் வந்தவர்களைத் தீவிரமாய் அடையாளம் காணும் கட்டமைப்பை அனைத்து நாடுகளும் கொண்டிருக்கவேண்டும் என்றார்.

அத்துடன், பாதிக்கப்பட்டவர்களையும் தனிமைப்படுத்துவதற்கான வசதிகளையும் ஏற்படுத்துவது அவசியம் என்றார் அவர். 

Top