Images
  • pneumonia
    (படம்: Reuters)

சீனாவில் பரவி வரும் கொரோனோ கிருமி தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

சீனாவில் தற்போது பரவி வரும் நிமோனியா காய்ச்சல் கிருமி, மனிதரிடமிருந்து மனிதருக்குப் பரவும் வாய்ப்பு ஓரளவு இருப்பதாக
உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக, ஒரே வீட்டில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்களிடையே அந்தக் கிருமி பரவும் சாத்தியம் அதிகம்.

ஆகவே, உலகெங்கும் உள்ள மருத்துவமனைகள், அந்த நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தும் ஆயத்தநிலையில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

தாய்லந்தில் சீனப் பெண்மணி ஒருவர் புதிய கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்காலம் என்று அஞ்சப்படுகிறது.

தற்போது வூஹான் நகரில் 41 பேர் புதிய வகை கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வூஹானிலுள்ள ஒரு கடலுணவுச் சந்தையிலிருந்தே அந்தக் கிருமி பரவியதாக நம்பப்படுகிறது.



 

Top