Images
  • Pfizer COVID-19 vaccine
    (கோப்புப் படம்: Reuters/Sandra Sanders)

குறைந்த நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டோர் booster தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள உலகச் சுகாதார நிறுவனம் பரிந்துரை

உலகச் சுகாதார நிறுவனம், குறைந்த நோய் எதிர்ப்புச் சக்தி் கொண்டோர் மூன்றாவது COVID-19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளப் பரிந்துரைத்துள்ளது.

கிருமித்தொற்றுக்கு எதிராக இன்னும் கூடுதல் பாதுகாப்புப் பெற, அங்கீகாரம் அளிக்கப்பட்ட booster தடுப்பூசியைப் போட அது பரிந்துரைத்தது.

இருப்பினும், அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தான் பரிந்துரைக்கவில்லை என்பதை நிறுவனம் வலியுறுத்தியது.

இந்நிலையில், சீனாவின் Sinovac, Sinopharm தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டோர், இன்னும் ஒரு முறை தடுப்பூசி போட்டுக்கொள்ளப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கிருமித்தொற்றுக்கு எதிரான அவற்றின் செயல்திறன் நாளடைவில் குறைவதாய், லத்தீன் அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் தெரியவந்ததாக வல்லுநர்கள் குறிப்பிட்டனர்.

Top