Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஒலி அளவு தொடர்பில் புதிய பாதுகாப்புத் தரங்கள் பரிந்துரை

ஐக்கிய நாட்டு  நிறுவனம், ஒலி அளவு தொடர்பில் புதிய பாதுகாப்புத் தரங்களைப் பரிந்துரைத்திருக்கிறது.

வாசிப்புநேரம் -
ஒலி அளவு தொடர்பில் புதிய பாதுகாப்புத் தரங்கள் பரிந்துரை

(படம்: AFP)

ஐக்கிய நாட்டு நிறுவனம், ஒலி அளவு தொடர்பில் புதிய பாதுகாப்புத் தரங்களைப் பரிந்துரைத்திருக்கிறது.

உலகில், கைபேசிகளையும் பிற கேட்பொலிச் சாதனங்களையும் அதிகமாகப் பயன்படுத்துவதால் ஒரு பில்லியனுக்கும் அதிகமான இளையர்களின் கேட்கும் சக்திக்கு ஆபத்து நேரக்கூடும் என்று முன்னதாக அது எச்சரிக்கை விடுத்திருந்தது.

கேட்பொலிச் சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள்
புதிய அனைத்துலகத் தரத்தை பின்பற்ற வேண்டும் என்று உலகச் சுகாதார அமைப்பும் அனைத்துலகத் தொலைத்தொடர்பு ஒன்றியமும் இணைந்து அறிக்கை விடுத்துள்ளன.

எனினும் அந்தத் தரத்தைப் பின்பற்றுவது கட்டாயமில்லை.

எல்லாக் கேட்பொலிச் சாதனங்களிலும் ஒலி அளவைச் சீராக வைத்திருப்பதற்கான மென்பொருளைச் சேர்க்கும்படி அது கேட்டுக்கொண்டது.

ஒருவர் எவ்வளவு நேரம், எந்த அளவில் ஒலியைக் கேட்கிறார், அதனால் அவரின் கேட்கும் திறன் எந்த அளவிற்குப் பாதிப்புக்கு ஆளாகும் என்பதை அந்த மென்பொருளால் கண்காணிக்க முடியும்.

பயனீட்டாளர்கள் ஆபத்தான அளவில் ஒலியைச் செவிமடுக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தால் அந்த மென்பொருள் அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்