Images
  • WHO Chief
     படம்: AFP

COVID-19: உலகில் சுமார் 3 பில்லியன் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் - உலக சுகாதார நிறுவனம்

உலக நாடுகளில் சுமார் மூன்று பில்லியன் மக்கள் தனிமைப்படுத்தப்பட்ட சூழலில் வாழ்ந்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

COVID-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் பயணத் தடைகளையும் நெருக்கடி நிலையையும் அறிவித்திருப்பதை முன்னிட்டு நிறுவனம் அவ்வாறு குறிப்பிட்டது.

புதிய வகை கொரோனா கிருமியால் உலக அளவில் சுமார் 470,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 20,000-க்கும் அதிகமானோர் மாண்டுவிட்டனர்.

அனைத்துலக ரீதியில் ஒருங்கிணைந்த முயற்சியின் மூலம்தான் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டாரெஸ் கூறியுள்ளார்.

COVID-19 கிருமிப் பரவல் மனித குலத்திற்கே அச்சுறுத்தல் என்ற அவர், வசதி குறைந்த நாடுகளுக்குக் கைகொடுக்கும் நோக்கில் 2 பில்லியன் டாலர் நிதிக்கான கோரிக்கையை முன்வைத்தார். 

Top