Images
  • who
    (படம்: Reuters)

COVID-19 கிருமித்தொற்று எப்படிப் பரவத் தொடங்கியது? -கண்டறியும் சிறப்புக் குழு

COVID-19 கிருமித்தொற்று எப்படிப் பரவத் தொடங்கியது என்பதைக் கண்டறிய, உலக சுகாதார நிறுவனம் சிறப்புக் குழு ஒன்றைச் சீனாவுக்கு அனுப்பவிருக்கிறது.

கிருமித்தொற்றின் தாக்கம் எந்த அளவு மோசமாக இருக்கிறது என்பதும் ஆராயப்படும் என நிறுவனத்தின் தலைவர் டாக்டர் Tedros Ghebreyesus கூறினார்.

மேலும், 1,700 சுகாதாரத் துறை ஊழியர்களும் எவ்வாறு கிருமித்தொற்றுக்கு ஆளாயினர் என்பது பற்றியும் சிறப்புக் குழு கண்டறியத் திட்டமிட்டுள்ளது.

குழுவின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு சீனாவிலும் உலக அளவிலும் கிருமியைக் கட்டுப்படுத்துவது குறித்த நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும் என்று டாக்டர் Tedros கூறினார்.

ஜனவரி மாதத்தின் பிற்பாதியில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட சுகாதார ஊழியர்களின் எண்ணிக்கை உச்சக்கட்டத்துக்கு வந்ததை நிறுவனத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

அதையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சரியத் தொடங்கியது.

ஊழியர்களின் பாதுகாப்பை வலுப்படுத்தியதோடு தகுந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டதன் மூலம் அது சாத்தியமாயிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. 

Top