Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

COVID-19 தடுப்பூசிகளைத் தயாரிக்கும் நாடுகள், அவற்றை COVAX திட்டத்துக்கு வழங்கவேண்டும்: உலகச் சுகாதார நிறுவனம்

COVID-19 தடுப்பூசிகளைத் தயாரிக்கும் நாடுகள், அவற்றைச் சுயமாக விநியோகம் செய்வதற்குப் பதிலாக, அனைத்துலக COVAX திட்டத்துக்கு வழங்குமாறு உலகச் சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

வாசிப்புநேரம் -

COVID-19 தடுப்பூசிகளைத் தயாரிக்கும் நாடுகள், அவற்றைச் சுயமாக விநியோகம் செய்வதற்குப் பதிலாக, அனைத்துலக COVAX திட்டத்துக்கு வழங்குமாறு உலகச் சுகாதார நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதன்மூலம், தேவைப்படும் அனைவருக்கும் தடுப்பூசி சென்று சேருவதை உறுதிசெய்யமுடியும் என அது குறிப்பிட்டது.

COVAX திட்டத்தில் இடம்பெறாத சில நாடுகளுடன் சீனாவும், சில ஏழை நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியமும் தடுப்பூசிகளை வழங்கும் ஒப்பந்தங்களைச் செய்துகொண்டதை அடுத்து, அது அந்த வேண்டுகோளை முன்வைத்தது.

அத்தகைய ஏற்பாடுகள், COVAX திட்டத்தின் இலக்குகளைக் கீழறுப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் குறிப்பிட்டது.

அண்டை நாடுகள் அல்லது நட்பார்ந்த உறவுகொண்ட குறிப்பிட்ட சில நாடுகளுக்கு அரசாங்கங்கள் தடுப்பூசி வழங்கத் திட்டமிடலாம்.

அதற்கான ஏற்பாடுகளைச் செய்துதருவதற்குத் தயாராக இருப்பதாய் உலகச் சுகாதார நிறுவனம் கூறியது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்