Images
  • vaccine (8)
    (படம்: AFP)

தடுப்பூசி போட்டுக்கொள்வதால் மக்கள் COVID-19 தொற்றுக்கு ஆளாக மாட்டார்கள் என்ற நம்பிக்கை தவறு! - உலகச் சுகாதார நிறுவனம்

உலகச் சுகாதார நிறுவனம், தடுப்பூசி போட்டுக்கொள்வதனால் மக்கள் கிருமித்தொற்றுக்கு ஆளாக மாட்டார்கள் என்று நம்புவதாக எச்சரித்துள்ளது.

நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ் (Tedros Adhanom Ghebreyesus), தடுப்பூசி போட்டுக்கொண்டோர் ஏனைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தேவையில்லை என்று தவறாகப் புரிந்துகொண்டுள்ளதைச் சுட்டினார்.

டெல்ட்டா வகைக் கிருமி பரவுவதைத் தடுப்பூசிகள் 40 விழுக்காடு வரை குறைப்பதாகக் கூறப்படுகிறது.

அவ்வகைக் கிருமி எளிதில் பரவக்கூடியது என்பதால், அதற்கு எதிரான தடுப்பூசிகளின் செயல்திறன் குறைந்துள்ளதாய் அவர் சொன்னார்.

தடுப்பூசிகள் உயிரைக் காப்பாற்றும், ஆனால் அவற்றைப் போட்டுக்கொள்வதால் நோய்ப்பரவலைத் தடுக்கமுடியும் என்று பொருள் ஆகாது எனத் திரு. கேப்ரியேசஸ் சுட்டினார்.

முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், கூட்டநெரிசலைத் தவிர்த்தல், நல்ல காற்றோட்டம் உள்ள உட்புற இடங்களில் சந்தித்தல் போன்ற நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு அவர் கேட்டுக்கொண்டார். 

Top