Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

உலக அளவில் தடுப்பூசிகள் சமமாக விநியோகம் செய்யப்படவில்லை-உலகச் சுகாதார நிறுவனம் அக்கறை

உலக அளவில் தடுப்பூசிகள் சமமாக விநியோகம் செய்யப்படவில்லை-உலகச் சுகாதார நிறுவனம் அக்கறை

வாசிப்புநேரம் -

உலக அளவில் தடுப்பூசிகள் சமமாக விநியோகம் செய்யப்படாதது குறித்து, உலகச் சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் கெப்ரியேஸஸ் (Tedros Ghebreyesus) அக்கறை தெரிவித்துள்ளார்.

ஏழை நாடுகளில் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு அது கிடைக்கவேண்டும்; ஆனால் அதற்கு முன்னதாகப், பணக்கார நாடுகளில், இளையர்களும், ஆரோக்கியமானோரும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது நியாயமானதல்ல என்று அவர் கூறினார்.

49 வசதி படைத்த நாடுகளுக்கு 39 மில்லியனுக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாகத் திரு கெப்ரியேஸஸ் குறிப்பிட்டார்.

ஒப்புநோக்க, ஓர் ஏழ்மையான நாட்டில் வெறும் 25 தடுப்பூசிகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதை அவர் சுட்டினார்.

இதுவரை, சீனா, இந்தியா, ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் Covid-19 தடுப்பூசிகளைத் தயாரித்துள்ளன.

ஆனால் அவற்றுள் பெரும்பாலான நாடுகள், அவற்றைத் தங்கள் குடிமக்களுக்கு மட்டுமே பயன்படுத்தி வருகின்றன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்