Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'நொவல் கொரொனா கிருமித்தொற்று, உலகத்துக்கு வந்திருக்கும் மாபெரும் அச்சுறுத்தல்'

நொவல் கொரொனா கிருமித்தொற்று, உலகத்துக்கு வந்திருக்கும் மாபெரும் அச்சுறுத்தல்

வாசிப்புநேரம் -
'நொவல் கொரொனா கிருமித்தொற்று, உலகத்துக்கு வந்திருக்கும் மாபெரும் அச்சுறுத்தல்'

(கோப்புப் படம்: REUTERS/Denis Balibouse)

நொவல் கொரொனா கிருமித்தொற்று, உலகத்துக்கு வந்திருக்கும் மாபெரும் அச்சுறுத்தல் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் டாக்டர் டெட்ரோஸ் ஜிப்ரியிஸஸ் (Tedros Ghebreyesus) கூறியுள்ளார்.

உலக நாடுகள், கிருமி பரவுவதைக் கட்டுக்குள் வைத்திருக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

கொரோனா கிருமித்தொற்று குறித்த ஆராய்ச்சிகளைத் துரிதப்படுத்தவேண்டும் என்று திரு. டெட்ரோஸ் கோரிக்கை விடுத்தார்.

இவ்வேளையில் உலக சுகாதார நிறுவனத்தின் நிபுணர் குழு, புதிய வகை கொரோனா கிருமி குறித்த ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகளுக்கு உதவும் நோக்கில் நேற்றிரவு பெய்ச்சிங் சென்றடைந்தது.

நிபுணர் குழு, சீன விஞ்ஞானிகளுடன் இணைந்து செயல்படும்.

கொரொனா கிருமிப் பரவலைத் தடுக்கும் முயற்சிகளில் சீனா ஈடுபட்டு வருகிறது.

கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் கைதேர்ந்த மருத்துவர் புருஸ் அலிவார்ட் (Bruce Eil-ward) நிபுணர் குழுவுக்குத் தலைமையேற்கிறார்.

4 ஆண்டுக்கு முன்னர் மேற்கு ஆப்பிரிக்காவில் பரவிய எபோலா கிருமிப் பரவலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டவர் அவர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்