Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'COVID-19 கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தயார் நிலையில் இல்லை'

COVID-19 கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தயார் நிலையில் இல்லை என்று உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

வாசிப்புநேரம் -
'COVID-19 கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தயார் நிலையில் இல்லை'

(படம்: Fabrice COFFRINI/AFP

COVID-19 கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தயார் நிலையில் இல்லை என்று உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

சீனாவுக்கு வெளியே COVID19 கிருமித்தொற்று பரவி வரும் வேளையில் அது அவ்வாறு தெரிவித்துள்ளது.

ஆஸ்திரியா (Austria), குரோஷியா (Croatia), சுவிட்சர்லந்து (Switzerland) ஆகிய நாடுகளில் முதன்முறை கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

கிருமிப்பரவலைச் சமாளிப்பதில் சீனா மேற்கொள்ளும் முயற்சிகளை உலகச் சுகாதார நிறுவனம் பாராட்டியது.

ஐரோப்பிய நாடான இத்தாலி கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த வலுவான நடவடிக்கை எடுத்துவருவதாக உலகச் சுகாதார நிறுவனப் பேச்சாளர் Christian Lindmeier கூறினார்.

பல்லாயிரம் மக்கள் வாழும் சில நகரங்களை இத்தாலி முடக்கி வைத்திருப்பதை அவர் சுட்டினார்.

இத்தாலியில் கிருமித்தொற்று காரணமாக ஏழு பேர் மாண்டனர்.

283 பேருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டது.

தற்போது, உலகில் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் COVID-19 கிருமிப்பரவல் ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கிருமித்தொற்று காரணமாக மாண்டோர் எண்ணிக்கை
2,700க்கும் அதிகம்.

உலக அளவில் 80,000க்கும் அதிகமானோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.   

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்