Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

ஊடுருவல் காரணமாகப் பல நாடுகளில் முடங்கிய விக்கிப்பீடியா இணையத்தளம்

பிரபல மேற்கோள் இணையத்தளமான விக்கிப்பீடியா, திட்டமிடப்பட்ட ஊடுருவல் காரணமாகப் பல நாடுகளில் முடங்கியுள்ளதாய் விக்கிமீடியா அறநிறுவனம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
ஊடுருவல் காரணமாகப் பல நாடுகளில் முடங்கிய விக்கிப்பீடியா இணையத்தளம்

(படம்: AFP/John Macdougall)

பிரபல மேற்கோள் இணையத்தளமான விக்கிப்பீடியா, திட்டமிடப்பட்ட ஊடுருவல் காரணமாகப் பல நாடுகளில் முடங்கியுள்ளதாய் விக்கிமீடியா அறநிறுவனம் தெரிவித்துள்ளது.

இணையத்தளத்தை நிர்வகிக்கும் அந்த அறநிறுவனத்தின் இணைப்பகம் மாபெரும் தாக்குதலுக்கு இலக்கானதாக அதன் ஜெர்மானிய Twitter பக்கம் தெரிவித்தது.

உலகின் ஆகப் பிரபலமான இணையத்தளங்களில் ஒன்றான அந்தக் கலைக் களஞ்சியத்தின் மீதான தாக்குதல் தொடர்வதாகவும் அதனைச் சரிசெய்ய குழுக்கள் பணியாற்றி வருவதாகவும் விக்கிமீடியா மற்றோர் அறிக்கையில் தெரிவித்தது.

DDoS எனும் சேவை முடக்கத்தை ஏற்படுத்தும் தாக்குதல்கள் பெரும்பாலும் நச்சு நிரல்களால் பாதிக்கப்பட்ட ஏராளமான கணினிகளைக் கொண்டு ஓர் இணையத்தளத்தை ஒரே நேரத்தில் ஊடுருவ உத்தரவிடப்படும் சம்பவங்களாகும்.

அத்தகைய மாபெரும் தாக்குதல் இணையத்தளக் கணினி இணைப்பகங்களை முடக்கி, சேவையைத் தாமதமடையச் செய்யும் அல்லது முற்றாகக் காணாமல் போகச் செய்து விடும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்