Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் இன்னும் எத்தனைப் புறநகர்ப் பகுதிகள் தீக்கிரையாகும்? அதிபர் வேட்பாளர் பைடன்

அமெரிக்காவின் மேற்குக் கரையோரம் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ, வாஷிங்டன் (Washington), ஆரெகன்

வாசிப்புநேரம் -
டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் இன்னும் எத்தனைப் புறநகர்ப் பகுதிகள் தீக்கிரையாகும்? அதிபர் வேட்பாளர் பைடன்

(படம்: AFP/Brendan Smialowski)

அமெரிக்காவின் மேற்குக் கரையோரம் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ, வாஷிங்டன் (Washington), ஆரெகன்
(Oregon), கலிஃபோர்னியா (California) ஆகிய மாநிலங்களைத் தாண்டி, மெக்ஸிகோ (Mexico) எல்லை வரை பரவியுள்ளது.

காட்டுத்தீயால் இதுவரை சுமார் 3 மில்லியன் ஏக்கர் நிலப்பரப்பு சேதமடைந்துள்ளது.

30க்கும் அதிகமானோர் காட்டுத்தீயால் உயிரிழந்தனர். ஆரெகன் மாநிலத்தில் மட்டும் 20க்கும் அதிகமானோரைக் காணவில்லை.

குளிர்பருவம் தொடங்கிவிட்டதால், விரைவில் நிலைமை சீராகும் என்று அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) கூறினார்.

ஆனால், விஞ்ஞானரீதியாக அதற்கு வாய்ப்பில்லை என்று இயற்கை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

பருவநிலை மாற்றத்தைவிட, காடுகளை நிர்வாகம் செய்வதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளே, தீக்கான காரணம் என்று திரு டிரம்ப் நம்புகிறார்.

அதிபர் தேர்தல் வேட்பாளர் ஜோ பைடன் (Joe Biden), திரு. டிரம்ப்பின் கருத்துகளைச் சாடியுள்ளார்.

பருவநிலை மாற்றத்தைக் காரணமாக ஏற்றுக்கொள்ள மறுக்கும் திரு டிரம்ப் மீண்டும் பதவிக்குவந்தால், இன்னும் எத்தனை புறநகர்ப் பகுதிகள் தீக்கிரையாகுமோ என்று திரு. பைடன் கேள்வி எழுப்பினார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்