Images
  • Winged Lizard (1)
    (படம்: AFP/UNIVERSIDAD DE CHILE)

சிறகுகள் கொண்ட பல்லியா?

பழங்காலத்தில் வாழ்ந்த சிறகுகள் கொண்ட பல்லி வகையின் படிமங்கள் சில்லியில் (Chile) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Pterosaur என்ற அந்த டைனசோர் வகை (dinosaur), சுமார் 160 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தது.

அதன் படிமங்கள், அட்டகாமா (Atacama) பாலைவனத்தில் 2009ஆம் ஆண்டே கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், அது எந்த வகை டைனசோர் என்பது அண்மையில் தான் உறுதியானது.

அவற்றின் சிறகுகள் 2 மீட்டர் நீளம் வரை இருக்கக்கூடும் என்றும், அவற்றுக்கு நீண்ட வாலும் கூர்மையான மூக்கும் இருந்ததாகவும் சில்லி பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் கூறினார்.

அதுவே சில்லியில் கண்டுபிடிக்கப்பட்ட ஆகப் பழமையான Pterosaur படிமங்கள் என்று கூறப்படுகிறது.

-AFP

Top