Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்காவில் மீண்டும் புயல்: பல விமானச் சேவைகள் ரத்து

அமெரிக்காவை மீண்டும் பாதித்திருக்கும் புயலால் நூற்றுக்கணக்கான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வாசிப்புநேரம் -
அமெரிக்காவில் மீண்டும் புயல்: பல விமானச் சேவைகள் ரத்து

([படம்: Pixabay)

அமெரிக்காவை மீண்டும் பாதித்திருக்கும் புயலால் நூற்றுக்கணக்கான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

டெக்ஸஸ் மாநிலத்திலும், கிழக்குக் கரையோரங்களிலும் பனிப்பொழிவு கடுமையாக இருக்கிறது. நிலைமை இன்னும் மோசமாகக் கூடும் என்ற முன்னுரைப்பை ஒட்டி, விமான நிறுவனங்கள் சேவைகளை ரத்து செய்யத் தொடங்கியிருக்கின்றன.

உலகளவில், பயணிகள் போக்குவரத்தில் முன்னிலை வகிக்கும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ், சுமார் 270 விமானச் சேவைகளைத் ரத்து செய்துள்ளது.

ரிவர் டெல்டா ஏர்லைன்ஸ், யுனைடெட் ஏர்லைன்ஸ் ஆகியவையும் சேவைகளை ரத்து செய்திருக்கின்றன.

குளிர்காலத்தில் ஏற்படும் இத்தகைய பிரச்சினைகளால், விமான நிறுவனங்களின் வருவாய் பெருமளவு பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்