Images
  • FIRE

படுக்கையில் எரித்துக் கொல்லப்பட்ட மாது

பார்படோஸில் உடற்குறையுள்ள சகோதரரைப் பராமரித்து வந்த பிரிட்டிஷ் மாது படுக்கையில் இருந்தபோது அடையாளம் தெரியாத நபர் வீட்டினுள் புகுந்திருக்கிறார்.

44 வயது நேட்டலி கிரிச்லோவின் (Natalie Crichlow) கழுத்தை நெரித்து, அவர்மீது எரிபொருளைத் தெளித்துத் தீ மூட்டியிருக்கிறார்.

மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட மாது காயங்களின் காரணமாக 9 நாள் கழித்து உயிரிழந்தார். அவருடைய உடலில் 75 விழுக்காட்டுக்குத் தீக்காயங்கள் இருந்தன.

சம்பவம் எதனால் நடந்தது என்று குடும்பத்தாருக்குத் தெரியவில்லை.

மூன்று பிள்ளைகளுக்குத் தாயாரான கிரிச்லோ இரண்டு முறை புற்றுநோயிலிருந்தும் பக்கவாதத்திலிருந்தும் குணமடைந்து வந்தவர்.

மாதின் சடலத்தைப் பிரிட்டனுக்கு அனுப்புவதற்கு நிதி திரட்டி வருகின்றனர் குடும்பத்தினர்.

பார்படோஸ் காவல்துறை சம்பவத்தைச் சரியாக விசாரிக்கவில்லை என்று குடும்பத்தினர் குறைகூறியுள்ளனர். சம்பவத்தின் தொடர்பில் இதுவரை யாரும் கைதுசெய்யப்படவில்லை.
     

Top