Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கிருமித்தொற்றால் வேலை இழந்த கழுதைகள்... எங்கே?

கிருமித்தொற்றால் வேலைகளை இழந்து திண்டாடுவது மனிதர்கள் மட்டும் அல்ல... விலங்குகளும் தான்.

வாசிப்புநேரம் -

கிருமித்தொற்றால் வேலைகளை இழந்து திண்டாடுவது மனிதர்கள் மட்டும் அல்ல... விலங்குகளும் தான்.

குறிப்பாக, ஜோர்தானின் (Jordan) கழுதைகள்...

ஜோர்தானின் பிரபல சுற்றுலாத்தலமான பெட்ராவின் (Petra) கரடுமுரடான பாதையில், சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்செல்லும் வேலையை அங்குள்ள கழுதைகள் செய்துகொண்டிருந்தன.

கிருமிப்பரவலால் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்தது.

அதோடு கழுதைகளும் கரைந்துவிட்டன.

சுற்றுலாப் பயணிகளிடமிருந்து வரும் வருமானம் குறைந்துவிட்டதால், தங்களுக்கே உணவுக்கு வழியில்லை... கழுதைக்கு எங்கிருந்து உணவு அளிப்பது என்கின்றனர் அவற்றின் உரிமையாளர்கள்.

UNESCO உலக மரபுடைமைத் தலமான பெட்ராவிற்கு 2019ஆம் ஆண்டில்,
சுமார் 1 மில்லியன் பேர் வருகை அளித்தனர்.

நோய்த்தொற்றால் சென்ற ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட பெட்ரா, சென்ற மாதம் (மே) மீண்டும் திறக்கப்பட்டது.

எனினும், சுற்றுப்பயணிகளின் வருகை குறைவாகவே உள்ளதால், வாழ்வாதாரத்தில் பெரிய மாற்றம் இல்லை என்கின்றனர் கழுதை உரிமையாளர்கள்.

-AFP 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்