Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

COVID-19 தடுப்புமருந்துகளின் மதிநுட்பச் சொத்துரிமைக்கு விலக்கு அளிப்பதை எதிர்க்கும் உலக வங்கித் தலைவர்

COVID-19 தடுப்புமருந்துகளின் மதிநுட்பச் சொத்துரிமைக்கு விலக்கு அளிப்பதை எதிர்க்கும் உலக வங்கித் தலைவர்

வாசிப்புநேரம் -
COVID-19 தடுப்புமருந்துகளின் மதிநுட்பச் சொத்துரிமைக்கு விலக்கு அளிப்பதை எதிர்க்கும் உலக வங்கித் தலைவர்

படம்: REUTERS

COVID-19 தடுப்புமருந்துகளின் மதிநுட்பச் சொத்துரிமைக்கு விலக்கு அளிப்பதை எதிர்ப்பதாக உலக வங்கித் தலைவர் டேவிட் மல்பாஸ் (David Malpass) கூறியுள்ளார்.

மருந்தாக்கத் துறையின் புத்தாக்கச் சாதனைகளை அது தடுக்கும் என்று அவர் சொன்னார்.

உலக வர்த்தக நிறுவனம், தடுப்புமருந்துகளின் மதிநுட்பச் சொத்துரிமைக்கு விலக்கு அளிப்பது குறித்த பேச்சுகளை ஜெனிவாவில் நடத்தும் வேளையில்
திரு. மல்பாஸின் கருத்து வந்துள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், குறுகிய காலத்துக்காவது விலக்கு அளிக்கப்படவேண்டும் என்று கூறுகின்றன.

அவ்வாறு செய்வது, சமமற்ற தடுப்பு மருந்து விநியோகத்தைக் கையாள உதவும் என்று சுகாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஆனால் சில பணக்கார நாடுகளும் பெரிய மருந்தாக்க நிறுவனங்களும் அதனை மறுக்கின்றன.

வர்த்தகத் தடைகள், மூலப்பொருள்களுக்கான தட்டுப்பாடு, உற்பத்தித்திறனில் குறைபாடு போன்றவற்றால்தான் தடுப்புமருந்துப் பற்றாக்குறை ஏற்படுவதாக அவை கூறுகின்றன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்