Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

'உலக வெப்பமயமாதலைக் கட்டுக்குள் கொண்டுவருவதன் மூலம், மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றலாம்': ஆய்வறிக்கை

உலகச் சுகாதார நிறுவனம், 26ஆவது ஐக்கிய நாட்டுப் பருவநிலை மாற்ற மாநாட்டுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

உலகச் சுகாதார நிறுவனம், 26ஆவது ஐக்கிய நாட்டுப் பருவநிலை மாற்ற மாநாட்டுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதோடு, உலகம் முழுவதையும் சேர்ந்த 45 மில்லியன் சுகாதாரத்துறை நிபுணர்களின் வெளிப்படையான கருத்துகளைக் கொண்ட கடிதமும் வெளியிடப்பட்டது.

இம்மாத இறுதியில் ஸ்காட்லாந்தின் கிலாஸ்கோ நகரில் நடைபெறவிருக்கும் சந்திப்பு குறித்த இலக்குகள் அதில் இடம்பெற்றுள்ளன.

உலக வெப்பமயமாதலைக் கட்டுக்குள் கொண்டுவருவதன் மூலம், மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றலாம் என்று உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்தது.

எரிசக்தி, போக்குவரத்து, நிதி என எல்லாத் துறைகளிலும் நடவடிக்கை எடுக்க அதன் அறிக்கை அழைப்பு விடுத்தது.

பெரிய அளவிலான பருவநிலை நடவடிக்கைகள் மூலம் கிடைக்கும் பொதுச் சுகாதாரப் பலன்கள், அவற்றின் பாதிப்புகளை விட மிகவும் அதிகம் என்று நிறுவனம் குறிப்பிட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்